ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை..!
ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்த போதிலும், உயிர் பலி தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மேலும் ஒரு உயிர் பறிபோயுள்ளது. ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கணபதி (25) என்பவர் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியை விளையாடியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடன் தொல்லையை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புகாரின்பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.






