கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்..!
நடிகர் கஞ்சா கருப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரவாயல் காவல்நிலையத்தில் அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
மதுரவாயலில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கலைமாமணி விருது திருடப்பட்டு இருப்பதாக கஞ்சா கருப்பு புகார் அளித்திருந்தார். இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷ், ஆன்லைன் மூலம் கஞ்சா கருப்பிடம் இருந்து வீட்டை மீட்டு தரும்படி புகார் அளித்துள்ளார்.






