ஜம்முவில் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மாண்ட கோயில் குடமுழுக்கு அறிவிப்பு..!
ஜம்முவில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதம் 8ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. ஆந்திராவிற்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்படும் ஆறாவது கோவிலாக ஜாமுவேல் புதிய கோவில் உருவாகி வருகிறது.
ஏற்கனவே ஹைதராபாத், சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதம் 8ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கு நிறைவுற்ற உடனே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.





