--- --:--:-- --

இன்று மாலை பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பு?

2

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்ததை அடுத்து இந்தியாவிலும் எண்ணெய் விலை அதிகரிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதனால் 5 மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

 

இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ஏப்ரல் 29 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயரும் எனக் குறிப்பிட்டிருந்தார். மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஐந்து மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ அரசாங்கம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை எனக் கூறியுள்ளார். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

எல்பிஜி, பெட்ரோலியம் மற்றும் டீசல் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கின்றன, விலைகளும் உயரவில்லை, எனவே பீதியடைய வேண்டாம். எண்ணெய் தட்டுப்பாடு என மக்கள் பீதியுடன் பல இடங்களில் எரிபொருள் வாங்குவதைப் பார்ப்பதாகவும், எண்ணெய் பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். இதற்கிடையே, ஏனாமில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக உள்ளதால் அவற்றை வாங்க, பெட்ரோல் பங்குகளில் ஆந்திர மக்கள் குவிந்தனர். ஆந்திரப் பிரதேசத்தில் நிலவும் மின்வெட்டு மற்றும் தற்போது நடைபெற்று வரும் பயிர் அறுவடை உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.

 

எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வரும் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே, ஆந்திரப் பிரதேசத்தை விட புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாமில் எரிபொருள் விலை 12 முதல் 14 ரூபாய் வரை குறைவாக உள்ளது. இதனால் ஏனாமில் பெட்ரோல்-டீசல் வாங்க அண்டை மாநிலமான ஆந்திர மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருள்களை வாங்கிச் செல்கின்றனர். கேன் மற்றும் பேரல்களுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு விவசாயிகள் உள்ளிட்டோர் வந்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon