--- --:--:-- --

திமுக கோப்புகள் மூன்றாம் பாகத்துக்கான ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை..!

2

மிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கோப்புகள் மூன்றாம் பாகத்திற்கான ஆடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில் அத்துடன் இது முடியப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக கோப்புகள் என்ற பெயரில் ஊழல்கள் என குறிப்பிட்டு பட்டியல்களை வெளியிட்டு வருகிறார்.

 

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் திமுக கோப்புகள் முதல் பாகத்தை அண்ணாமலை வெளியிட்டார். இதனையடுத்து திமுக கோப்புகள் மூன்றாம் பாகத்தை ஆடியோ வடிவில் அண்ணாமலை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.

 

அதில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மற்றும் தமிழக உளவுத்துறை முன்னாள் தலைவர் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் என்ற பெயரில் ஆடியோ இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் தமிழக உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாபர் சேட் இடையிலான ஆடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அண்ணாமலை தமது எக்ஸ் பக்கத்தில் 2ஜி வழக்கு குறித்து சிபிஐ விசாரணையை திமுக எவ்வாறு கையாண்டது என்பது குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டார்.

 

Right Menu Icon