நெடுஞ்சாலையில் நடந்த சோகம்.. பெற்றோர் கண் முன்னே பறிபோன குழந்தைகளின் உயிர்..!
சென்னை அடுத்த சோழவரம் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் பெற்றோர் கண் முன்னே அவரது மகன் மற்றும் மகள் உயிரிழந்தனர்.
சண்முகம் மகேஸ்வரி குடும்பத்தினர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் விபத்து நேரிட்டது. சண்முகம், மகேஸ்வரி மற்றும் டிராக்டர் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.






