வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மோதல்..!
காஞ்சிபுரத்தில் சமஸ்கிருத பாடம் பயில்வது தொடர்பாக வடகலை, தென்கலை பிரிவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வாலாஜாபாத் அருகே உள்ள கிராமத்தில் நடைபெறும் பார்வேட்டை திருவிழாவிற்கு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
அதன்படி வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து விழாவுக்காக செல்லும் பொழுது வடகலை தென்கலை பிரிவினர் இடையே சமஸ்கிருத பாடலை யார் முதலில் பாடுவது என்பதில் தகராறு ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. வடகலை, தென்கலை பிரிவினர் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.






