--- --:--:-- --

தன் குழந்தை அருகில் இருந்தும் பார்க்காமல் உயிரை விட்ட திருமணமாகாத மாணவி.!

10

திருச்சி மாவட்டத்தில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையை பெற்ற இளம்பெண் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாய்க்கால் கரையில் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசார் அதனை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே எழவனூர் பகுதியில் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி விஷம் குடித்ததில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

விசாரணை நடத்திய பொழுது மீட்கப்பட்ட குழந்தை கலைவாணியின் குழந்தை என்பதும், திருமணத்திற்கு முன்பே குழந்தையை பெற்றதும் தெரியவந்தது. மேலும் தனக்கு இரண்டு பேர் விஷம் ஊற்றிக் கொன்றதாக கலைவாணி வாக்குமூலம் அளித்ததன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon