இறந்த மனைவியின் உடலோடு 21 வருடங்கள் வாழ்ந்த முதியவர்..!
தாய்லாந்தில் 72 வயது முதியவர் ஒருவர் 21 வருடங்களாக இறந்துபோன மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து இறுதியாக அவரை தகனம் செய்துள்ளார். தாய்லாந்தின் பாங்காக்கில் கடந்த 2001 இல் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மனைவி உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார்.
மனைவி இறந்ததும் அவரது உடலை அடக்கம் செய்யாமல் வீட்டிலேயே 21 ஆண்டுகளாக சவப்பெட்டியில் வைத்து இருந்துள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மனைவியின் உடலை வைத்திருந்துவிட்டு கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தனது துணையிடம் இருந்து விடை பெற்றிருக்கிறார்.
அவர் இதனை முடிவில்லா அன்பின் ஆதாரம் என்றும் கருதுகிறார். வீட்டினுள் இருந்து சவப்பெட்டியை அழுதுகொண்டே வெளியே எடுத்துச் செல்ல அறக்கட்டளை ஊழியர்களுக்கு உதவியிருக்கிறார்.
மேலும் அவர் தனது மனைவியின் உடலை பார்த்து அம்மா நீ ஒரு சிறு வேலையாகத்தான் விட்டு செல்கிறாய். மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவாய் இது நீண்ட காலம் செல்லாது நான் சத்தியம் செய்கிறேன் என்று கூறி நெஞ்சை கனக்க செய்துள்ளார்.





