--- --:--:-- --

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பலி..! மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு..!

4

சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட சுலோச்சனா மேரி என்ற 48 வயது பெண்ணுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

கொரொனா சோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் நாளுக்கு நாள் சுலோச்சனா மேரி உடல்நிலை மோசமாகி உயிரிழந்ததாக அருகில் வசிக்கும் பெண்ணொருவர் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்று அடுக்கடுக்கான கேள்வியை வீடியோ பதிவாக வெளியீட்டு கேட்டுள்ளார். தொற்றால் பாதிக்கப்பட்ட சுலோச்சனா மேரிக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் அவர் உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon