--- --:--:-- --

விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ரூ.45 லட்சம் கையாடல்!

5

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் 45 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் வடபழனி உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

 

அதில் பெண் ஊழியர் ஒருவர் 45 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் விருகம்பாக்கம் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்டு வருவதால் விருகம்பாக்கம் போலீசார் புகார் குறித்து விசாரிக்க மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon