நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் விழா மேடை அருகே விபத்து..!
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஐந்தாம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் விழா மேடை அருகே நிகழ்ந்த தீ விபத்தில் 3க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து சேதம் அடைந்திருக்கின்றன.
இதனால் ஆதிச்சநல்லூரில் நிர்மலா சீதாராமன் பங்கேற்க இருக்கும் இடம் அருகே பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. பனை மரங்கள் தீ விபத்தில் கருகிய நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நிகழ்ச்சி மேடையில் இருந்து 100 மீட்டர் அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் வாகனங்கள், உணவகம், மரங்கள் எரிந்து சேதமாகியுள்ளன. தீ விபத்து நடந்த இடத்தை வருவாய் துறை அதிகாரிகளும் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.






