நாளை முதல் இலவசப் பேருந்துகளை இயக்க அனுமதி!
நாளை முதல் மாநில எல்லைக்கு உட்பட்ட இலவசப் பேருந்துகள் இயக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பையில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் மக்களை சொந்த பகுதிகளுக்கும் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மற்ற பகுதிகளுக்கு கொரொனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் சமூக இடைவெளி பற்றிய பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் தனிமை படுத்த பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயங்காது என்றும் அரசு தெரிவித்துள்ளது.







