ஆல்கஹால் அனலைசர் கருவியை ஊத சொல்லி..புல்லாங்குழல் வாசிக்கிறியா என கேலி செய்த காவலர்
கள்ளக்குறிச்சியில் டிரங்க் அண்ட் ட்ரைவில் சிக்கிய நபரை ஆல்கஹால் அனலைசர் கருவியை ஊத வைத்து கேலி வீடியோ எடுத்து போலீசார் பரப்பியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த இளைஞர் ஒருவரை பிடித்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று குடித்து இருக்கிறாரா என்பதை சோதனை செய்ய ஆல்கஹால் அனலைசர் கருவியை ஊத சொல்லியுள்ளனர். அவரோ போதை கிறுகிறுக்க பாம்பாட்டி மகுடி ஊதுவதை போல அந்த கருவியை கூறியுள்ளார்.
போதையில் இருந்த அந்த நபரை கருவி இல்லாமலேயே மேலும் மேலும் ஊத கூறியுள்ளனர். காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நபர் மீது சட்டப்படி நடவடிக்கை மட்டும் இல்லாமல் கேலியாக வீடியோ பதிவு செய்த போலீசாரின்செயல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.





