விமானப் படை வீரர் செய்த விபரீத செயல்..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விஷம் அருந்திய விமானப்படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடுவலூர் ஊராட்சி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த 30 வயது சதீஷ் குமார் என்பவர் டெல்லியில் விமான படை வீரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 22ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வடசென்னிமலையில் பூச்சி மருந்து குடித்து விட்டு குடும்பத்தினருக்கு தகவலை கூறியுள்ளார் .
மீட்கப்பட்ட அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.





