--- --:--:-- --

அ.தி.மு.க. ஒன்றிணைய வலியுறுத்தி வர்த்தக அணி நிர்வாகி தீக்குளித்து தற்கொலை

6

ஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த தஞ்சை மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் படுதோல்விக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி குழப்பங்களால் கடும் மன வேதனை அடைந்திருந்த அவர், இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்பாக தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 

அதில், அதிமுகவினர் இனியாவது தனித்தனி அணிகளாகப் பிரியாமல் ஒற்றைத் தலைமையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட்டு மீண்டும் ஆட்சியைக் பிடிக்க வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon