பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக நிர்வாகி நீக்கம்..!
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை 103ஆவது அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட பெண் ஆய்வாளர் ராஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.





