பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்..!
தமிழகத்தில் பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (மே 7-ம் தேதி) ஒரே நேரத்தில் தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விண்ணப்ப பதிவு இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆகிய மூன்று முக்கிய கல்விப் பிரிவுகளுக்கான விண்ணப்பப் பதிவு இணையதளங்களை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு, மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு தாமதமாக நடைபெறுவதால், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்படும் காலியிடங்களை ஈடுசெய்யும் வகையில் கூடுதலாக 15 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையில் முந்தைய ஆண்டை விட 12.63 சதவீதம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



