சுருக்குமடி வலையை பயன்படுத்த கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!
கடல் பகுதியில் இருந்து 1,512 மைல்களுக்கு அப்பால் சுருக்கு வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கு கோரி மோட்டார் பட உரிமையாளர்கள், மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணையின் போது பாதித்த விசைப்படகு மீனவர்கள் தரப்பு மாநில அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி இரட்டை மடி வலைகளை ஆழ்கடலுக்கு எடுத்து செல்ல தங்களுக்கு தனி வழி அமைத்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
சில வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை குறிப்பிட்டனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் சுருக்கமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரிய விவகாரத்தில் இடைக்கால உத்தரவு இருப்பதாக கூறி வழக்கின் உத்தரவு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.






