பணம் பறிக்கும் முயற்சியில் நடிகை விஜயலட்சுமி.. நாம் தமிழர் கட்சியினர் புகார்..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி அவதூறு பரப்புவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையினரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வேண்டுமென்றே தன் மீது அவதூறு பரப்புவதாக சீமான் தெரிவித்த நிலையில் காவல்துறையினரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த நாம் தமிழர் கட்சியினர் நடிகை விஜயலட்சுமி மீதும் அவருக்கு துணையாக இருக்கும் வீரலட்சுமி மீதும் குற்றவாளி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சீமானிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பறிக்கும் நோக்கத்தோடு விஜய் லக்ஷ்மி பொய் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அந்த கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.





