--- --:--:-- --

நடிகை வாணி போஜன் செல் நம்பர் என நினைத்து ரியல் எஸ்டேட் அதிபருக்கு இரவில் தொல்லை!

5

ஓ மை கடவுளே திரைப்பட நடிகை வாணி போஜன் செல்போன் எண் என்று நினைத்து ரியல் எஸ்டேட் அதிபரின் செல் எண்ணுக்கு இரவு நேரத்தில் குடிபோதையில் ரசிகர்கள் தொல்லை கொடுப்பதாகவும் இதற்கு காரணமான பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

ஓ மை கடவுளே படத்தில் வாணி போஜன், நாயகன் அசோக் செல்வனிடம் தனது செல்போன் நம்பரை பரிமாறிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த எண்ணை 19 ஆண்டுகளாக சென்னை எம்கேபி நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பூபாலன் பயன்படுத்தி வருகிறார்.

 

இதை அறியாத சினிமா ரசிகர்கள் பூபாலன் என்னை வாணிபோஜன் என நினைத்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து கொண்டு தொல்லை கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon