--- --:--:-- --

விஜயை புகழ்ந்து தனது புத்தகத்தில் பதிவிட்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா..!

17

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தமது வாழ்க்கைப் பயணத்தை அன்ஃபினிஷ்ட் எனும் தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். பென்குயின் எனும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த புத்தகத்தை தமது முதல் காதல், திரையுலக வாழ்க்கை, அழகி பட்டம் வென்றது என பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

 

வாழ்வில் சந்தித்த நல்ல மற்றும் கெட்ட தருணங்களை இந்த புத்தகத்தில் எழுதியுள்ள பிரியங்கா சோப்ரா தனது கடந்த கால வாழ்க்கையை நினைக்கும்போது எந்த குற்ற உணர்வும் தோன்றவில்லை என கூறியுள்ளார்.

 

அந்த புத்தகத்தில் நடிகர் விஜய் குறித்து எழுதியுள்ள பிரியங்கா சோப்ரா அவரது பணிவு, ரசிகர்களுடனான நேசம் என்றென்றும் நினைவில் இருக்கும் என பாராட்டி எழுதியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon