கர்ப்ப கால அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ள நடிகை கரீனா கபூர்..!
நடிகை கரீனா கபூர் தனது கர்ப்ப கால அனுபவங்களை தொகுத்து அவர் வெளியிட்ட புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. குழந்தை வளர்ப்பு காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த கரீனா கபூர் தனது கர்ப்ப கால அனுபவங்களை பிரக்னன்சி என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார்.
இந்த நிலையில் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் என்ற பெயரை தனது புத்தகத்தில் வைத்து கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தி விட்டார் என கரீனா கபூர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த ஆல்ஃபா ஒமெகா கிரிஸ்டின் மகா சங்கத்தின் சார்பில் கரீனாவின் புத்தகத்தின் பெயரில் இடம் பெற்றுள்ள பைபிலை நீக்க வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.





