--- --:--:-- --

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு ஏற்பட்ட விபத்து..!

13

பிரபல முன்னணி இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சியின் மகள் தான் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். தெலுங்கில் நடிகையாக என்ட்ரி கொடுத்த இவர் தமிழில் ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானார். பின் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 

இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த Hridhayam படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். மேலும் தற்போது 2 மலையாள படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஆண்டனி. இப்படத்தை இயக்குனர் ஜோஷி இயக்குகிறார்.

 

இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சி ஒன்றில் விபத்து ஏற்பட்டு அதில், நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடிபட்டுள்ளது. அந்த புகைப்படத்தை நடிகை கல்யாணி தனது சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon