சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வருவதால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரி கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 42 முதல் 55 கிலோமீட்டர் தூரம் வீசப்படும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





