சில்க் ஸ்மிதா வாழ்க்கை படத்தில் நடித்த நடிகை தற்கொலை..!
சில்க் ஸ்மிதா மற்றும் அவரை போன்ற கவர்ச்சி நடிகைகளின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 2011இல் வெளியான இந்தப் படத்தில் வித்யா பாலன் நாயகியாக நடித்தார்.
இந்த படத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலாவாக நடித்தார் ஆர்யா. சிதார் இசைக் கலைஞரான நிகிலின் மகள் இவர்.வளர்ப்பு நாயுடன் வசித்து வந்துள்ளார். ஆர்யா வீட்டு வேலை செய்யும் பெண் பணியாளர் பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்ததில் படுக்கை அறையில் பிணமாக கிடந்தார். மருந்துகளும் மது பாட்டில்களும் காணப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். உடலை கைப்பற்றிய போலீசார் இயற்கை அல்லாத மரணம் என்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






