--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 1218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…1296 பேர் டிஸ்சார்ஜ்…13 பேர் உயிரிழப்பு!!

10.1

மிழகத்தில் இன்று 12 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 1296 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து கீழ் முகமாகவே இருந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1218 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 7 லட்சத்து 97 ஆயிரதது 693 ஆக உயர்ந்துள்ளது.

 

தினசரி கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாவோரை விட பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை கடந்த பல நாட்களாகவே தொடர்ந்து அதிகமாக உள்ளது. இன்று 1296 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இன்னும் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,218 ஆக குறைந்துள்ளது. நேற்றும் முன் தினமும் தலா 17 பேர் கொரொனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழப்பு 13 ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 883 ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னையில் இன்று 345 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை மட்டும் 2.19 லட்சம் பேர் என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் மட்டும் மொத்த உயிரிழப்பு 3910 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 72,122 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதுவரை 1.28 கோடி பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon