--- --:--:-- --

புதுச்சேரி முதல்வரை ரங்கசாமியை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி..!

1

புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்காக கட்டணத்தை குறைக்க வேண்டும் என அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விஜய் சேதுபதி மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

 

அப்போது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் தற்போது 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது கூறியுள்ளார்.

 

இதனால் சிறிய படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜய்சேதுபதியை கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக பரிசீலனை செய்வதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon