இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்.!
நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நானே வருவேன் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் நாள் தொடங்க உள்ளதாகவும் செல்வராகவன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
திரில்லர் கதையம்சம் கொண்ட நானே வருவேன் திரைப்படம் தயாரிப்பாளர் தாணுவுக்கு திருப்தியைத் தரவில்லை என கூறப்படுகிறது. செல்வராகவன் கதையை மாற்றியதோடு ராயபுரத்தில் தம்பி அண்ணனை கொண்டு படம் அமைந்துள்ளதால் ராயன் என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின .
இந்த மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இதில் தனுஷ் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.







