ரேஷன் கடையில் வரும் அதிரடி மாற்றம்..!
நியாயவிலை கடைகளில் இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திலுள்ள நியாயவிலைக் கடைகளை பொது தரவு அலுவலக மாற்றி பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக நியாயவிலை கடைகளை அலுவலகமாக மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிக்க அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு தமிழக அரசின் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
நியாயவிலை கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதாலும் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் சேவை கொண்டு செல்லவும் கூட்டுறவுத்துறை இந்த புதிய முயற்சியில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.





