துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்
ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறினாா்.
பீகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்குத் திருட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்திலிருந்து தோ்தல் ஆணையம் நோக்கி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.





