மகாராஷ்டிராவில் மும்பையில் மட்டும் சுமார் 6,700 பேருக்கு கொரோனா!
மகாராஷ்டிராவில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பையில் சுமார் 6,700 பேர் கொரொனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரொனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அங்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 597 பேருக்கும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 475 பேர் தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர்கள். இதில் தாராவி பகுதிவாசிகள் 14 பேர் அடங்குவர். இதன்மூலம் மும்பையில் மட்டும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,664 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துவிட்டனர்.
தாராவியில் மட்டும் இதுவரை 18 பேரின் உயிரை பறித்து சென்று விட்டது. தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் இதுவரை 344 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் கொரொனா வைரசுக்கு இதுவரை 432 பேர் இறந்துவிட்டனர்.
மகாராஷ்டிராவில் கொரொனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தோற்று கண்டறியப்பட்ட அவர்களில் சுமார் ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேர் வீடுகளிலும், 10 ஆயிரத்து 900 பேர் மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.







