தோழியை கொலை செய்து விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை..!
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்து விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ராகுல் என்பவர் அறிமுகமாகி உள்ளார். பெண்ணிற்கு ராகுல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கொச்சி சென்ற ராகுல் தான் தங்கியிருந்த அறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தில் அறை எடுத்து ராகுல் தங்கியது தெரியவந்துள்ளது






