காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை..!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் போலீசில் சரண் அடைந்தார்.
விஷ்ணுபிரியா என்ற இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ஷியாம் என்பவரும் நட்பாக பழகி வந்த நிலையில் ஷாமுக்கு காதல் ஏற்பட்ட நிலையில் அவரிடம் தன் காதலை வெளிப்படுத்திய பொழுது அதனை ஏற்றுக்கொள்ள விஷ்ணுபிரியா மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரியாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை கழுத்தையும் கைகளையும் கத்தியால் அறுத்து கொலை செய்தார்.





