--- --:--:-- --

சாலையில் திடீரென சறுக்கிய பைக் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்..!

6

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென பைக் சரிந்து விபத்திற்கு உள்ளானது. பைக்கை ஓட்டி சென்ற இளைஞர் நூலிழையில் உயிர்த் தப்பினர். மழை பெய்ததனால் சாலையில் பரவலாக மிதமான தண்ணீர் காணப்பட்டது.

 

இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஈச்சர் வேன் ஒன்று திரும்பிக் கொண்டிருந்தது.

 

அப்பொழுது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சட்டென இருசக்க பிரேக் பிடிக்கவே சாலையில் இருந்த தண்ணீரால் வழுக்கி விழுந்து அதிவேகமாக சென்று வேலை நடுப்பகுதியில் மோதியுள்ளார்.

 

இதைக் கண்ட அருகே உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அந்த இளைஞரை மீட்டு உள்ளனர். இதில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக இளைஞர் உயிர் தப்பியுள்ளார். இதன் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon