சாலையோரம் கவிழ்ந்த பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பேருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை திருவண்ணாமலை சாலையில் 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.





