காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை துப்பாக்கி காட்டி மிரட்டிய இளைஞன்..!
உத்திரபிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி இளைஞரால் விரட்டப்படும் பொழுது அதனை தடுத்த மாணவியின் நண்பன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே அந்த கல்லூரி மாணவி தனது சக நண்பர்களுடன் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அவர் தன் காதலை ஏற்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும் அங்கு இருந்து செல்ல விடாமல் வழிமறித்த ராகுல் மாணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து மாணவி நண்பரான ஷங்கர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளான்.
அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே ராகுல் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கொலை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவானவரையும் அவரது குடும்பத்தினரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.





