--- --:--:-- --

பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர்..!

5

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதாளசாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டார். பொன்னேரி நகராட்சியில் கடந்த 4 வருட காலமாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது.

 

2021 இல் முடிய வேண்டிய பணி இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். ஜேசிபி மூலம் வாகனம் மீட்கப்பட்ட இளைஞரும் பத்திரமாக நீக்கப்பட்டுள்ளார்.

 

Right Menu Icon