--- --:--:-- --

ரயிலின் எஞ்சின் முன் பகுதியில் சிக்கிய பெண்ணின் முடி.. துடிதுடித்து பலி..!

4

சென்னை சென்ட்ரலை நோக்கி வந்த விரைவு ரயிலின் முன் பக்கத்தில் சிக்கியபடி இழுத்துவரப்பட்ட கல்லூரி மாணவியின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் தலைமுடி ரயிலின் முன்பக்க கொக்கியிலும், கால்கள் எஞ்சினுக்கு அடியிலும் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

 

அம்பத்தூர் கள்ளிகுப்பம் சீனிவாசன் நகரை சேர்ந்த கேத்தரின் ஷீபா என்ற அந்த மாணவி பெரம்பூர் ரயில் நிலையத்திற்கும் பெரம்பூர் கேரேஜ் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon