--- --:--:-- --

கொண்டையில் பாம்பைக்கொண்டு முடிச்சு போட்ட பெண்மணி..!

4

லைமுடியை பாம்பை கொண்டு முடிச்சு போட்ட பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஸ்நேக் வேர்ல்டு என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை நடத்தி வரும் ஒரு பெண் தான் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவித பாம்புகளின் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

 

அந்த வகையில் தனது தலை முடியை அள்ளி முடிந்து அதனை கட்டுவதற்கு பதிலாக பாம்பை பயன்படுத்தி முடித்து போட்ட வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் கடைவீதிக்கு செல்கிறார். அங்கிருந்த நபர் அந்த பெண்மணியை படம்பிடிக்க தொடங்குகிறார்.

 

வணிக வளாகத்தில் உள்ள பலர் அந்த பெண்ணை கவனிக்காததால் அலட்டிக்கொள்ளாத அவர் சுதந்திரமாக நடமாடுகிறார். தலையை முடிவதற்கு கிராமப்புற பெண்கள் பெரும்பாலும் ரிப்பனை தான் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

 

அதன் தொடர்ச்சியாக ரப்பர்களை பயன்படுத்த தொடங்கினர். இந்த வீரப் பெண்மணிகள் பாம்பை பயன்படுத்துவதைக் கண்டு பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் மிரண்டு போயுள்ளனர்.

 

Right Menu Icon