ஆறு துறைகளுக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு..!
தமிழகத்தில் பொதுப்பணித் துறை உட்பட ஆறு துறைகளுக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கால்நடை, மீன்வளம், பால்வளத் துறை செயலாளராக இருந்த ஜவகர் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
நீர்வளத் துறை செயலாளராக உள்ள சந்தீப் சக்சேனா கூடுதலாக கவனித்து வந்த பொதுப்பணித் துறைக்கு புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கால்நடை மீன்வளம் மற்றும் பால் வளத் துறைக்கு கார்த்திக்கும், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைநலத்துறைக்கு சர்மாவும் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் பொறுப்புக்கு ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த துறையை கவனித்து வந்த மதுமதி தமிழ்நாடு சிறுதொழில் முன்னேற்ற கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.






