பைக்கில் வந்த பெண்ணை காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் அத்துமீறல்..!
திருச்சி மாவட்டம் திருவம்பூர் அருகே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வதுபோல் அத்துமீற முயன்ற புகாரில் கிராம தலைவர் கைது செய்யப்பட்டார்.
இரு தரப்பினருக்கும் இடையேயான இடப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணை வள்ளுவர் நகரை சேர்ந்த கிராமத்தலைவர் ரமேஷ் காவல் நிலையம் அழைத்துச் சென்று புகார் அளித்தார்.
பின்னர் அந்த பெண்ணுடன் ரமேஷ் வீடு திரும்பிய பொழுது வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. ரமேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





