தேக்கடி தலை மதகு பகுதியில் சிக்கிய காட்டு யானை..!
தேக்கடி பகுதியில் காட்டு யானை ஒன்று சிக்கிக் கொண்டதால் தமிழகத்திற்கு பாசனத்திற்காக தேடப்பட்டு வந்த தண்ணீர் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை நீர் தேக்கடியில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கிருந்த கால்வாய்க்குள் தவறி விழுந்த காட்டு யானை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்டது. தேக்கடி தலை மதகிற்கு முன்புறமுள்ள வலையில் சிக்கிய யானை உயிருக்கு போராடி வந்துள்ளது.
இதனையடுத்து முல்லை பெரியார் அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த 1,200 கன அடி நீரை உடனடியாக நீர்வளத்துறையினர் நிறுத்தினர். இதனால் தண்ணீரில் இழுவிசை குறைந்ததால் வலையில் சிக்கியிருந்த யானை கால்வாய் நீச்சல் அடித்து வனத்திற்குள் சென்றது.
இதன் பின்னர் மீண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது கண்காணிக்கப்படும் என தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினர் கூறியுள்ளனர்.





