நூறடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த வாகனம்..!
ஜம்மு காஷ்மீரில் சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். பிஸ்டுவார் மாவட்டத்தில் உள்ள அணை பகுதியில் நீர்மின் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் கட்டுமான பணிகளுக்காக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று திடீர் என்று கட்டுப்பாட்டை இழந்து 300 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்த நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இருக்கும் சூழலில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






