--- --:--:-- --

3 தலைமுறையாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் அதிசயம்..!

8

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வசித்து வரும் குடும்பம் தாய், மகன், பேரன் என அனைவரும் இரட்டையர்களாக தொடர்ந்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. துவரங்காடை சேர்ந்த இரட்டை சகோதரிகள் வள்ளி, தேவயானை அவர்களின் வள்ளிக்கு திருமணம் ஆகிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

 

அந்த குழந்தைகளுக்கு கார்த்திக், விக்னேஷ் என பெயரிட்டு மகிழ்ந்தனர். 21 வயதான இருவரும் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கார்த்திக் மற்றும் விக்னேஷ் இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் நேற்று ஒரே நாளில் வேறு வேறு மருத்துவமனையில் ஒரே நட்சத்திரத்தில் குழந்தை பிறந்துள்ளது.

 

இவ்வாறு அந்த குடும்பத்தில் வாழையடி வாழையாக இரட்டை குழந்தைகள் பிறந்து வருவது அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon