--- --:--:-- --

ஒருவரின் வயிற்றில் வளர்ந்த மரம்..!

6

துருக்கியில் அமைந்துள்ள கிராமத்தில் அத்தி மரம் ஒன்று வளர்ந்துள்ளது. அந்த பகுதியில் அதுபோன்று மரம் இல்லாததால் இது எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் ஒரு பகுதியாக மரத்தினடியில் ஆய்வாளர்கள் சோதனை நடத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

 

மரத்தின் அடியில் ஒரு மனிதனின் சடலம் ஒன்று இருந்துள்ளது. அந்த சடலத்தின் வயதிலிருந்தே இந்த அத்தி மரம் முளைத்துள்ளது தெரியவந்தது. உருக்குலைந்து மோசமான நிலையில் இருந்த அந்த சடலத்தை ஆய்வாளர்கள் போலீசார் உதவியுடன் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

 

அதில் அவரின் மரபணுக்களை வைத்து சோதனை செய்தபோது அந்த நபர் துருக்கி பழங்குடி இனத்தை சேர்ந்த அகமது என்பது தெரியவந்தது. அவர் கடந்த 1974-ஆம் ஆண்டு முதல் காணாமல் போனது தெரியவந்தது. அந்த காலத்தில் துருக்கி எல்லையில் இருந்து பழங்குடியின மக்களுக்கு இடையே யுத்தம் நடைபெற்று வந்தது.

 

அதில் ஒரு தரப்பில் அப்போது கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் அத்தி பழத்தை சாப்பிட்டதாகவும் அதனால் செடி முளைத்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon