பத்து நாட்களுக்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வந்த புலி சிக்கியது..!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது. புல்வெளி சுற்றுவட்டார பகுதிகளில் நடமாடிய புலி ஒன்று அந்த பகுதி மக்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. கால்நடைகளையும் புலி அடித்து உணவாக்கி வந்தது.
அச்சுறுத்தும் புலியை கூண்டு வைத்து பிடிக்க பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. நான்கு இடங்களில் கூண்டுகளை வைத்து கூலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஒரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் புலி சிக்கியது.
மருத்துவ பரிசோதனைக்காக வன விலங்குகள் மற்றும் சிகிச்சை மையத்திற்கு புலியை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.





