--- --:--:-- --

சென்னையில் கோர விபத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பலி..!

5

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் முன்னாள் சென்ற டிப்பர் லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் பொன்னேரி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரவிக்குமார் உயிரிழந்தார்.

 

கடந்த 1991 முதல் 1996 ஆம் ஆண்டுகளில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியர் அதிமுக ஆட்சியில் அதிமுகவின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார்.

 

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வரும் அவரது மகள் ரவீனா வார விடுமுறைக்காக ஊருக்கு வந்த நிலையில் அவரை மீண்டும் இன்று காலை கல்லூரியில் விட்டுவிட்டு தமது காரில் மனைவி நிர்மலாவுடன் திரும்பி வரும் பொழுது சீமாவரம் அருகே முன்னாள் சென்ற டிப்பர் லாரியின் பின்னால் கார் மோதியது.

 

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே ரவிக்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த மனைவி நிர்மலாவுக்கு சென்னை ஆர்.எஸ்.சாந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon