கல்லூரி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுனர்..!
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இருபத்தி ஒரு வயது கல்லூரி மாணவி சாலையில் நடந்து சென்ற பொழுது அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார். அப்போது மாணவி சத்தமாக கத்த ஆரம்பித்தார். இதனால் ஆட்டோ ஓட்டுனர் தப்ப முயன்றார்.
ஆனால் ஆட்டோ ஓட்டுநரை கல்லூரி மாணவி நிறுத்த முயன்ற நிலையில் ஓட்டுநர் ஆட்டோவை ஓட்டி சென்றார். சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி பின்பு தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.





