சிகிச்சை பெற்ற ஆறு வயது குழந்தை உயிரிழப்பு..!
ராஜபாளையத்தில் அரசு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறு வயது குழந்தை இறந்ததாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் மகன் கவிதேவநாதனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தைக்கு அதிகமாக வேர்த்து ஒழுகியது. இதனால் குழந்தையை அதே தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற பொழுது அங்கு மருத்துவர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்தார்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அளித்த தகவலின் பெயரில் குழந்தையின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





